“TRANS/HEARTS” is a beautiful project which awakens deep feelings. We have done more than five workshops in both Kerala and Tamil Nadu and we’re planning more. Teaching is fun filled and together we discover different ideas in painting and expression. I wish my best student and my very good friend, Kalki Subramaniam, all the best for this project. I’m thankful to be a part of it. Lets play with the magic of colours!”
_Master Hari

எனக்கு ஒவ்வொரு ஓவியப்பயிற்சி வகுப்பின்போதும் சற்று பயமாக இருக்கும். ஆனால் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு நன்றாக செய்துமுடிக்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சகோதரியின் குடும்பத்தில் நானும் இருப்பதை கடவுளின் ஆசியாக கருதுகிறேன்.
Every time I attend a workshop, I [have a] fear about doing new art work. I get encouragement from the team and that makes me complete a beautiful art work. It has been more than just a happy experience for me. It gives me peace. I am blessed to be in Sahodari’s team and to get this opportunity to learn.
_Prema

எனக்குத்தோன்றுவதைத்தான் நான் வரைவேன். நான் இன்னும் நிறைய பயிற்சி எடுக்கவேண்டியுள்ளது. வண்ணங்கள் தீட்டத்தீட்ட கவலைகளெல்லாம் பறந்தோடுகிறது. மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கிறது. கடந்துபோன வாழ்க்கைப்பற்றி எண்ணத்தோன்றுவதில்லை.
I paint what I think. I know I am not perfect, yet I have improved a lot. When I paint, I forget all my worries and it helps me. I also try to help other new participants in their art process. The workshops have been useful. I get peace and happiness through these workshops. It helps me not to turn back and look at my wounded life.
_Sowndharya

எனக்கு மிகவும் இந்த ஓவியக்கலை பிடித்திருக்கிறது. நான் இன்னும் நிறைய தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
I love painting so much. I wanted to learn more.
_Kanchana

எனக்கு நல்ல அனுபவம் கிடைக்கிறது. தூரிகை எப்படி பிடிக்கவேண்டும், வண்ணம் எப்படி தீட்டவேண்டும் என்றெல்லாம் கற்றுக்கொள்கிறேன்.. மற்ற ஓவியர்களின் படைப்புகளை பார்க்கும்போது நாமும் இதுபோல வரையவேண்டும் என்று பெரும் ஆவலாகவும், இன்னும் நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உந்துதலும் எனக்கு இருக்கிறது. நேசித்து வரையவேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.
I get a good experience. I have learned how to hold a brush, how to mix colours. When I see other artists’ works, I get inspired to paint like them and to paint more art works. I have learned to paint with love and passion.
_Ramba